
6 படங்கள்
கண்ணோட்டம்
பழுப்பு நிறக் காட்டு ஆந்தை என்பது இந்தியா, வங்காளதேசம், இலங்கை, இந்தோனேசியா, தைவான், தெற்கு சீனாவில் காணப்படும் ஒரு ஆந்தை இனமாகும். பழுப்பு நிற காட்டு ஆந்தை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்து வசிப்பவை ஆகும். இந்த இனம் உண்மையான ஆந்தை (ஸ்ட்ரிகிடே) குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் குடும்பத்தில் பெரும்பாலான ஆந்தைகள் உள்ளன. இது காது கொம்புகளற்ற ஆந்தை வகையைச் சேர்ந்தது. இது ஸ்ட்ரிக்ஸ் பேரினத்தைச் சேர்ந்தது.