சூடோபிலாட்டசு சோரோ, கன்னோருவ புதர் தவளை, என்பது ராகோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளை சிற்றினமாகும். இது மத்திய இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது இலங்கையில் கண்டிக்கு அருகிலும், கடல் மட்டத்திலிருந்து 500-800 மீட்டர் உயரத்தில் உள்ள நக்கிள்சு வனப்பகுதியிலும் காணப்படுகிறது.