உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இராணவானா பூனைப்பாம்பு

Ranawana’s Cat Snake

Boiga ranawanei

அகணிய

இராணவானா பூனைப்பாம்பு
compiled by rbrausse with Quantum GIS Map data: Made with Natural Earth. Free vector and raster map data @ naturalearthdata.com. Range data: Samarawickrama, P. · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இராணவானா பூனைப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் போயிகா இராணவானே என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினமானது இலங்கை பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி. இராணவானா பூனைப்பாம்பு நடுத்தர அளவிலானது. இப்பாம்பின் நீளம் மூக்குப் பகுதியிலிருந்து குதம் வரை அதிக பட்சமாக ஆண் பாம்பில் 1105 மிமீ நீளமும் பெண் பாம்பில் 899 மிமீ வரை இருக்கும். பக்கவாட்டாகத் தட்டையான உடலைக் கொண்டுள்ளது. செதில்கள் மென்மையாகவும் வயிற்றுக் கவசங்கள் வெளிப்படையான அடையாளங்கள் இல்லாமல் காணப்படும். முதுகு மற்றும் தலையின் நிறம் மஞ்சள்-பழுப்பாகவும், பரந்த குறுக்கு அடர் பகுதியினைக் கொண்டுள்ளது. கீழ்ப் பக்கத்தில் இணைக்கப்படாத பழுப்பு நிறப் பட்டைகள் காணப்படும். வயிற்றுப் பகுதி வெளிர் மஞ்சள் நிறமானது. முதுகுப்புறத்தை விட இலகுவானது. முகப் பகுதியில் அடையாளங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது. வாலின் நிறம் உடலின் நிறத்தினை ஒத்துள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Boiga ranawanei — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இராணவானா பூனைப்பாம்பு — CC BY-SA 4.0