இலங்கையின் அழிந்துபோன விலங்குகள்
பனியுகங்களில் கடல் மட்டம் குறைவாக இருந்தபோது இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்தது. அப்போது சிங்கங்கள், நீர்யானைகள், காண்டாமிருகங்கள் இங்கு வாழ்ந்தன; அவற்றின் புதைபடிவங்கள் இரத்தினபுரியின் இரத்தினக் கல் படிவுகளில் கிடைத்துள்ளன.
