
9 படங்கள்
கண்ணோட்டம்
அல்பக்கோர் அல்லது குளிர்கடல் வெள்ளைச் சூரை (Albacore) என்று அழைக்கப்படும், இது பேர்சிஃபார்மீசு வரிசையைச் சேர்ந்த ஒரு வகை சூரை ஆகும். இது உலகம் முழுவதும் மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கடல்களில் சூரிய ஒளி மண்டலம் மற்றும் அதற்கு கீழே உள்ள மீசோபெலஜிக் மண்டலத்திலும் காணப்படுகிறது. இவை அத்திலாந்திக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலும், மத்தியதரைக் கடலிலும் உலகளவில் அறியப்பட்ட ஆறு தனித்துவமான பிரிவுகளாக உள்ளன. குளிர்கடல் வெள்ளைச் சூரை மீனானது கூம்பு வடிவ மூக்கு, பெரிய கண்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நீளமான மார்புத் துடுப்புகளுடன் ஒரு நீளமான, இருமுனையுங்கூம்பிய உடலைக் கொண்டுள்ளது. இதன் உடல் கருநீல முதுகும், வெள்ளி நிற பக்கங்களும் கொண்டது. இவை 1.4 m நீளம் வரை அடையும்.