
7 படங்கள்
கண்ணோட்டம்
கறிவேம்பு, கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.