
9 படங்கள்
கண்ணோட்டம்
கனகாம்பரம் தென்னிந்தியா மற்றும் இலங்கையை தாயகமாகக் கொண்ட அகாந்தேசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது பெரும்பாலும் தென்னிந்தியா சார்ந்த ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் காணப்படுகிறது. இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும் எக்காலமும் குறிப்பிட்டு வகையராமல் என்றும் பூக்கும் தாவரமாகும். இதை பெண்டுகள் தலையிற் சூடிக்கொள்ளவும், மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுத்தியும், பிற அலங்காரப் பொருட்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.