
கண்ணோட்டம்
துடுப்பு வால் கரிச்சான் என்பது நடுத்தர அளவிலான ஒரு ஆசிய பறவை ஆகும். இது நீண்ட துடுப்பு போன்ற வாலைக் கொண்டுள்ளதால் இப்பெயரைப் பெற்றது. இவை பெரும்பாலும் மலையை ஒட்டிள்ள காடுகளில் காணப்படும். இவை எப்போதும் சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கக்கூடியன. மேலும் இது ராஜாளி, வல்லூறு போன்ற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் ஒப்புப்போலிப் பண்பையும் கொண்டது. இது பூச்சிகளை வேட்டையாடி உண்பதால், இயற்கை பூச்சிக் கட்டுப்படுத்தியாக வேளாண்மைக்கு உதவுகிறது.