
கண்ணோட்டம்
கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
இப்பறவை பொதுவாகக் கிராமப்புறங்களில் காணப்படும். பாதையோரப் புதர்களிலும், கற்களிலும் அமர்ந்துகொண்டு வாலை ஆட்டியபடி இருக்கும்.
