சிறுத்த பெருநாரை என்பது பெருநாரை பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இப்பறவைக்குப் பெருநாரையைப்போல் நெஞ்சில் தொங்கும் பை கிடையாது. இதன் முதுகு ஒளிரும் கருமை நிறத்திலும், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இப்பறவை இந்தியா முழுக்க பரவலாகவும், தென்கிழக்காசியாவிலிருந்து ஜாவா வரையிலும் காணப்படுகின்றது.