உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சின்னச் செம்பகம்

Lesser Coucal

Centropus bengalensis

குறைந்த கவலை

சின்னச் செம்பகம்
JJ Harrison · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

சின்னச் செம்பகம் அல்லது சின்னச் செம்போத்து Centropus bengalensis ) என்பது குயில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குயில் இனம் ஆகும். இது பரந்த வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இது பல ஒத்த இனங்களுடன் உள்ளது. இது பெரும்பாலும் காடுகளை ஓட்டிய புல் மற்றும் சதுப்பு நிலத்தை வாழ்விடமாக கொண்டுள்ளது. இது அதன் சிறிய உடல் அளவு, சிறிய அலகு, தலை மற்றும் பின்புறத்தின் இறகுகளில் வெளிறிய கோடுகளால் வேறுபடுகிறது. இதன் பின்னங்கால் விரலில் உள்ள மிக நீண்ட நகம் மற்றும் தனித்துவமான கூவல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பருவ கால இறகு வேறுபாடுகளைக் கொண்டுள்ள சில குயில்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் மற்ற குயில்களைப் போல, பாலினங்களிக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Lesser coucal — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சின்னச் செம்பகம் — CC BY-SA 4.0