
7 படங்கள்
கண்ணோட்டம்
பேய் விரட்டி என்பது ஒரு மருத்துவ தாவரம் ஆகும். தும்பை பேரினத்தைச் சேர்ந்த இத்தாவரம் பெருந்தும்பை என்ற பெயராலும், பேய் மிரட்டி என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது, இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்த, வெளிறிய வண்ணமும், வெகுட்டலும் வாடையும் உடையது. மருத்துவ குணமுடைய இந்த தும்பைத் தாவரம் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை, புதராக இருக்குமிடங்களில் அரிதாக காணப்படும். 1810 ஆம் ஆண்டுவாக்கில் இது ஒரு மருத்துவ குடும்பத்தைச் சார்ந்த குட்டை தாவரப் பேரினம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது பசுபிக், சீனா, இந்திய துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூ கினி, மடகாஸ்கர் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது.