
7 படங்கள்
கண்ணோட்டம்
வண்ணத் தவளை, இது இலங்கை பெரும் தவளை, சாதா பெரும் தவளை, இலங்கை வண்ணத் தவளை, இலங்கை கலோவுளா, இந்திய வண்ணத் தவளை, அல்லது வண்ணக் கோளவடிவ தவளை என்பது நேபாளம், வங்காளதேசம், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா, மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் சுமார் 1300 மீட்டர் உயரமான பகுதியிகளில் காணப்படும் கூர்வாய்த் தவளை இனமாகும். இது ஒரு பொதுவான இனமாகும். இது முதலில் கலோவு லா புல்ச்ரா, தவளை இனத்தின் ஒரு துணையினமாக விவரிக்கப்பட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று பட்டியலிடுகிறது.