
7 படங்கள்
கண்ணோட்டம்
மயில் வசீகரன் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், மியான்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் பட்டாம்பூச்சி வகையாகும். தரையை ஓட்டிப் பறக்கும் மயில் வசீகரன்களை இந்திய நிலப்பரப்பில் பொதுவாகக் காணலாம். ஆரஞ்சு நிற இறகுகளின் மேற்புறம் பழுப்புநிறப்பட்டையும் இறகுகளின் ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளும் காணப்படும். மயில் இறகுகளில் உள்ளதைப்போன்று இவற்றின் இறகுகளின் மத்தியில் அடர்பழுப்பு நிற வளையம் இருப்பதால் இவற்றுக்கான ஆங்கில பெயர் அமைந்ததாக கருதலாம்.