
9 படங்கள்
கண்ணோட்டம்
ரிச்சர்டு நெட்டைக்காலி என்பது ஒரு நடுத்தர அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை வட ஆசியப்பகுதிகளின் திறந்த புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளுக்கு நீண்ட தூரம் வலசை போகின்றன.