
கண்ணோட்டம்
மாடப்புறா என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.