
8 படங்கள்
கண்ணோட்டம்
புள்ளி இலத்தி அல்லது இலத்தி என்பது ஸ்கேடோபாகிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கண்கவர் மீன் வகையாகும். இந்த வகை மீன்கள் மின்னும் சிவப்பு, மிளிரும் பச்சை என இரு வகை வண்ணத் தோற்றங்களில் காணப்படுகின்றன. இந்த மீன் இனம் பொதுவாக இந்தோ-பசிபிக் பகுதியில், யப்பான், நியூ கினியா, தென்கிழக்கு ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இவை கடலோரமாகவும் ஆறுகள் கடலில் சேரும் கழிமுகப் பகுதிகள், சதுப்புநிலங்களில் வாழக்கூடியன. இவை பிரபலமான மீன் காட்சியக மீன்களாகும்.