
7 படங்கள்
கண்ணோட்டம்
திக்கெல் நீல ஈப்பிடிப்பான் (சையோரினிசு டிக்கெல்லியே) என்பது குருவி வகைகளுள் சிறிய பறவையாகும். இது பெசாரிபார்மிசு வரிசையினைச் சார்ந்த பறவையாகும். இது பூச்சிகளை உண்ணும் பறவையாகும். திக்கெல் நீல ஈப்பிடிப்பான் வெப்பமண்டல ஆசியாவில், இந்தியத் துணைக் கண்டம் முதல் கிழக்கு நோக்கி வங்காளதேசம் மற்றும் மேற்கு மியான்மர் வரையும் காணப்படுகிறது. இந்தோனேசிய நீல ஈப்பிடிப்பான் இதனுடைய இணை இனமாக முன்னர் கருதப்பட்டது. இந்த குருவியின் மேற்புறம் நீல நிறத்திலும் தொண்டை மற்றும் மார்பகம் பழுப்புச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை அடர்த்தியான புதர் மற்றும் காடுகளில் காணப்படுகின்றன.