உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டெருமை

කුළු මී හරකා

Bubalus arnee

அருகிவரும்

காட்டெருமை
Dr. Raju Kasambe · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

காட்டெருமை அல்லது ஆசிய எருமை என்பது இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காணப்படும் எருமை இனம் ஆகும். இன்று 4000 க்கு குறைவான தொகையில் காணப்படும் இந்த விலங்குகள் அழிந்து கொண்டுபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக “ஐசியுஎன்” அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில்( இவற்றின் மூன்று பரம்பரை காணும் காலப்பகுதியில்) காட்டெருமைகளின் தொகை குறைந்தபட்சம் 50 வீதத்தால் அருகியிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள். உலகெங்குமுள்ள காட்டெருமைகள் தொகை அண்ணளவாக 3400 என்ற கணிப்பீட்டில், 3100 மிருகங்கள் இந்தியாவில் 91 வீதமும், மீதி 9 வீதம் ஏனைய நாடுகளிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. வீட்டு எருமைகளின் மூதாதையர்தான் இந்தக் காட்டெருமைகள் என்று நம்பப்படுகின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Wild water buffalo — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): காட்டெருமை — CC BY-SA 4.0